fbpx

நடிகர்கள் மீது பாய்ந்தது பாலியல் வன்கொடுமை வழக்கு..!! வசமாக சிக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ..!!

பாலியல் புகாரில் சிக்கிய மலையாள நடிகர்கள் முகேஷ் உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வந்தனர். குறிப்பாக பிரபல நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது 3 நடிகைகள் பாலியல் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில், கொச்சியில் உள்ள மரடு காவல் நிலையத்தில் முகேஷ் மீது பிணையில் வர முடியாத வகையில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது, ஜெயசூர்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், பிணையில் விடுவிக்க முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மணியன்பிள்ளை மீதும் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இணைவதற்கு உதவுவதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்த இடவேலு பாபு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவிடம் நடிகைகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய மலையாள இயக்குநர் பிரகாஷ் முன்ஜாமின் கோரி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். 2022இல் கொல்லத்தில் உள்ள உணவகம் ஒன்றில், திரைப்படம் தொடர்பான விவாதத்தின் போது, இயக்குநர் பிரகாஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் கதை ஆசிரியர் ஒருவர் புகார் அளித்திருந்தார். மேலும், இதனை வெளியே சொல்லாமல் இருக்க ரூ.10,000 பணம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தன் மீது பொய் புகார் அளித்திருப்பதாக கூறிய இயக்குநர் பிரகாஷ், இப்பெண் ஏற்கனவே பாலியல் வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டவர் என்று தெரிவித்தார்.

Read More : அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்..!! செருப்பால அடிக்கணும்..!! கொந்தளித்த நடிகர் விஷால்..!!

English Summary

A case of sexual assault has been registered against Malayalam actors Mukesh and others who have been involved in sexual complaints.

Chella

Next Post

மகிழ்ச்சி...! 2025-ம் ஆண்டு பொங்கல் இலவச வேட்டி, சேலை...! முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு....!

Thu Aug 29 , 2024
Pongal 2025 Free Vetti, Saree

You May Like