பெரம்பலூர் மாவட்ட பகுதியில் அரணாரை தெருவில் சிவக்குமார் , என்கிற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்றைய தினத்தில் விடுமுறையாக இருந்ததால் குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், காலை நேரத்தில் வீட்டிற்குள் பாம்பு ஒன்று உள்நுழைய முற்பட்டிருக்கிறது. அந்த பாம்பினை கண்ட வளர்ப்பு பூனை திடீரென உள்நுழைய முயன்ற அந்த பாம்புடன் நீண்ட நேரம் சண்டை போட்டது. இதனில் ஏற்பட்ட சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வெகு நேரமாக இரண்டிற்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது பூனை பாம்பின் தலையை சட்டென்று கவ்வி பிடித்துள்ளது. மேலும் குதறி கொன்று தூக்கி சென்றுள்ளது. இறந்த பாம்பானது பெரும் விஷமுள்ள கட்டு விரியன் பாம்பின் வகையை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
வீட்டுக்குள் நுழைய முயன்ற கட்டு விரியன் பாம்பை கொன்று குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை குறித்து தகவலறிந்த அக்கம், பக்கத்தினர் ஆர்வமாக வந்து பூனையை பார்த்து கொண்டு சென்றனர், இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.