fbpx

சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டு..!! தயாராக இருக்கும் ஹமாஸ் அமைப்பு..!! இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

காஸா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்துள்ளது. இதையடுத்து, வடக்கு காசாவில் இருந்து பொதுமக்களை தெற்கு காசாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜோக் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ”இது அல்-கொய்தாவை அடிப்படையாக கொண்டது. 2003ஆம் ஆண்டு அந்த பயங்கரவாத அமைப்பு மேற்கொண்ட திட்டத்துடன் தொடர்புடையது. நாங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

செம ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்..!! ஓப்பன் நாமினேஷன்..!! மணியை பார்த்து அந்த வார்த்தை சொன்ன ஐஷு..!!

Mon Oct 23 , 2023
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். பின்னர், எழுத்தாளர் பவா செல்லதுரை தாமாகவே முன்வந்து வெளியேறினார். இதன் காரணமாக இரண்டாவது வாரம் எலிமினேஷன் நடைபெறவில்லை. இதற்கு அடுத்தபடியாக 3-வது வார எலிமினேஷனில் 11 பேர் இடம்பெற்று இருந்தனர். இதிலிருந்து குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான விஜய் வர்மா […]

You May Like