fbpx

கள்ளக்காதலனுக்கு பிறந்த குழந்தை..!! வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு..!! துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கடற்பகுதியில் சில தினங்களுக்கு முன் பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை கால்கள் ஒடிந்த நிலையில் வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

திருவனந்தபுரம் கொல்லம் கோட்டயம் உட்பட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்திற்குள் குழந்தை பிறந்தவர்களின் முகவரிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அஞ்சுதெங்கு பகுதியைச் சேர்ந்த ஜூலி என்ற பெண்மணியின் பெயர் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த காவல்நிலையம் அழைத்தனர். அப்போது விசாரணைக்கு ஆஜரான ஜூலி, தனக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஜூலியை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை நடத்தினர். அதில் அவர் கற்பம் தரித்து குழந்தை பிரசவித்தவர் என்பது தெரியவரவே, ஜூலியை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

காவலர்களே ஜூலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவர்கள் பேசுவதாக கூறி ஏன் குழந்தையை மூச்சடக்கி கொன்றீர்கள் வேண்டாம் என்றால் வேறு யாருக்காவது கொடுத்திருக்கலாமே என்று பேசியுள்ளனர். அப்போது போலீசார் குழந்தையின் கழுத்து உடைக்கப்பட்டு உள்ளதாகவும் பிரேத பரிசோதனையில் அனைத்தும் வெளிவரும் என கூறிய உடன் ஜூலி நடந்த உண்மைகளை போனில் கூறி உள்ளார்.

இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜூலிக்கு திருமணமாகி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்துவிட்டார். விதவையான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு ஜூலி கற்பம் தரித்துள்ளார். இதுவெளியில் தெரிந்தால் மானக்கேடு என்று எண்ணிய ஜூலி யாருக்கும் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். இந்நிலையில், தனக்கு பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட உடன் அதன் வாய் மற்றும் மூக்கை கைகளால் அடைத்து மூச்சை அடக்கி கொலை செய்து குழந்தையின் கை கால்களை வெட்டி படுகொலை செய்துவிட்டு வீட்டின் உள்ளேயே குழிதோண்டி புதைத்ததாகவும் இரண்டு நாட்கள் கழித்து உடலை தோண்டி எடுத்து கடலில் விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசர் ஜூலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கிய இளைஞர்…..! அதிரடியாக கைது செய்த கோவை காவல்துறையினர்…..!

Sat Jul 29 , 2023
கோயம்புத்தூரைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், குனியமுத்தூரை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆறு மாத காலமாக சஞ்சய் உடன் அந்த மாணவி பேசுவதை தவிர்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்த மனைவி வழக்கம் போல கல்லூரியை […]

You May Like