16 வயது சிறுவனுடன் பட்டதாரி பெண் காதலித்து உடலுறவு வைத்துக் கொண்டதன் விளைவாக, அந்த பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளாம்பர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கலை பட்டதாரி பெண். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இது குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் உறவு இருந்து வந்துள்ளது. 16 வயதே ஆன மைனர், பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். தங்களது காதலின் சின்னமாக, விருத்தாச்சலக் கோவிலில் வைத்து இருவரும், தாலி கட்டி திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால், அலைபாயுதே பட பாணியில், இருவரும், அவரவர் வீடுகளுக்கு தெரியாமல் அமைதியாக இருந்து வந்தனர்.
அவ்வபோது இருவரும் தனியாக சந்தித்து உடலுறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால், அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனை, அறிந்த மாணவன் பயந்து உண்மையான திருமண பந்தத்தில் இணைய விருப்பமின்றி அந்த பெண்ணை உதறித் தள்ளியுள்ளான். இதனால், கோபமான பெண், தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து, இரு குடும்பமும் பேச்சுவார்த்தை நடத்தி, ஊரறிய அவரை ஏற்றுக் கொள்ள மாணவனை வற்புறுத்தியிருக்கின்றனர். ஆனால், மாணவனும் சரி, அவரது குடும்பத்தினரும் சரி, இந்த உறவு வேண்டாம் என்றும், சின்ன குழந்தையை மயக்கி தவறான பாதையில் அழைத்துச் சென்றதாக அந்த பெண் மீது குற்றம்சாட்டி, அவரைத் தவறாகவும் பேசியிருக்கின்றனர். இதனால் கவலை கொண்ட பெண் குடும்பத்தார், மாணவனிடம் மேலும் பேசிய போது, ஒரு திடுக்கிடும் தகவலை அவர் போனில் கூறியுள்ளார்.
அந்த பெண்ணிற்கு, தான் மட்டுமின்றி மேலும் 4 பேருடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால், அந்த குழந்தை கண்டிப்பாக தன்னுடையதாக இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை அளித்தார். இந்த சம்பவம் போலீசிடம் வந்தது. அப்போது இது குறித்து விசாரித்த பின், மாணவன் கூறியது உண்மை என்று தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், வேறு 4 இளைஞர்களுடன் நெருக்கமாக பேசியிருந்தது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்களில் அதிக நேரம் அந்த மாணவன் பேசியதும், தாலி கட்டியதும் தெரியவந்ததால் மாணவன் தான் இக்குழந்தைக்கு தந்தை என கூறப்படுகிறது.
அதுவும், மாணவன் குறித்த தகவல் அவ்வளவு எளிதாக தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. அவர் சிக்கியது எப்படி என்றால், அவன் அப்பெண்ணை தனது மனைவி என பள்ளி நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளான். இந்த சம்பவம் குறித்து வெளியே தகவல்கள் கசிந்ததால் தான் மைனர் மாணவன் சிக்கி இருக்கிறான். தற்போது பச்சிளம் ஆண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணிற்கு பிறந்த குழந்தை உண்மையாகவே அந்த மைனருக்கு பிறந்ததா? இல்லை, வேறு யாரேனுக்கும் பிறந்ததா? என டிஎன்ஏ பரிசோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். மைனர் சிறுவன் சம்பத்தப்பட்டிருப்பதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.