28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். பெரும்பாலான பெண்கள் தங்கள் துணையுடன் ஒரு குழந்தையைத் திட்டமிடுவதற்கு முன்பு மிகவும் கடினமாக சிந்திக்க வேண்டும். வல்லுனர்களின் கூற்றுப்படி, ஒரு கர்ப்பம் கூட பெண்கள் தயாராக இல்லாத போது அவர்களின் உடல் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் 20 வயதுடைய பெண்கள் தங்கள் முதல் கர்ப்பத்தைப் பெறுவதற்கான பொதுவான வயது வரம்பாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. இருப்பினும், கோரா டியூக் என்ற பெண், தனது 17 வது வயதிலேயே முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதையடுத்து, 12 வருடங்களாக வருடம் ஒரு குழந்தை பெற்று வந்துள்ளார். அதன்படி, தற்போது 39 வயதான அவர் 28 வயதிற்குள் ஒன்பது குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு அவர் 12 வருடங்கள் கர்ப்பமாக இருப்பதாக TikTok இல் வெளிப்படுத்திய பின்னர் வைரலானார். அதில் 2001 ஆம் ஆண்டு 17 வயதில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த கோரா டியூக் 2012 இல் தனது கடைசி குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 17 வயதில் தனது கணவர் ஆண்ட்ரேவை தான் சந்தித்ததாகவும் அதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்ட பின்னர் எனது கணவருக்கு குழந்தை மீது மிகுந்த ஆசை என்பதால் அவருடைய ஆசைக்கேற்ப குழந்தைகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு, எலியா, 21, ஷீனா, 20, ஜான், 17, கெய்ரோ, 16, சயா, 14, அவி, 13, ரோமானி, 12, மற்றும் தாஜ் என்ற குழந்தைகள் உள்ளது. தனது 9 குழந்தைகளில் 3வதாக பெற்றெடுத்த குழந்தை பிறந்த 7 நாட்களில் உயிரிழந்தையும் வீடியோவில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய டீனேஜ் வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது என்றும், குழந்தை பெற்றுக் கொள்வதிலேயே எனது டீனேஜ் வாழ்க்கை முடிந்து விட்டது என்றும் இருப்பினும் நான் தற்போது எனது குழந்தைகளுக்காக சந்தோஷமாக வாழ்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.