fbpx

தந்தையின் மடியில் உயிரிழந்த குழந்தை: டாக்டர்களின் அலட்சியத்தால் நேர்ந்த துயரம்..!

உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் இருக்கும் பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, பெற்றோர், உடல்நல குறைவால் அவதிப்பட்ட தனது நான்கு வயது குழந்தையை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

இதை தொடர்ந்து, வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு போகும்படி கூறி அனுப்பினர். அந்த வார்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் நீண்ட வரிசை இருந்தது. எனவே, வரிசையில் நீண்ட நேரம் பெற்றோர் நின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை தேவைப்பட்ட அந்த குழந்தை தந்தையின் மடியிலேயே உயிரிழந்தது.

பெற்றோர் இருவரும் குழந்தை உயிரிழந்ததால் துக்கம் பொறுக்க முடியாமல் கதறி அழுதனர். அது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது. அவசர சிகிச்சை தேவைப்படும்போது, அதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாத மற்றும் மருத்துவ வசதி கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகம் ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

விமான நிலைய வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை ….  ஓட்டுனரான இளைஞர் தன் வாகனத்திலேயே உயிர்நீத்தார்….

Thu Sep 15 , 2022
சென்னை விமான நிலைய வளாகத்தில் வேன் ஓட்டுனர் தன் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்பும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவுந்திர ராஜன் (38) . இவர் சென்னை விமான நிலைய வளாகத்தில் சரக்கத்தில் , தனியார் சரக்கு நிறுவனத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தனியாகத்தான் சென்னை வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் சொந்த ஊரான விழுப்புரத்திலேயே உள்ளனர். இந்நிலையில் நேற்று […]

You May Like