fbpx

இளம்பெண் வயிற்றில் குழந்தையின் எலும்புக் கூடு..!! அதிர்ந்து போன மருத்துவர்கள்..!! நடந்தது என்ன..?

இளம் பெண் ஒருவர் கருவுறாமல் இருப்பதற்காக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும், இதனால் அவரது வயிற்றில் குழந்தையின் எலும்புக்கூடு மட்டும் இருந்ததாக கூறப்படுவது மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அவர், மருந்து கடையில் அவ்வப்போது கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால், அவருக்கு பாதியளவு மட்டும் கரு கலைந்ததாகவும், சில நாட்களாக அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் வயிற்றில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் எலும்பு கூட்டை அகற்றினர். தற்போது இளம் பெண்ணாக நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் பரிந்துரை இன்றி, தாங்களாகவே கருத்தடை மாத்திரை சாப்பிடுவது விபரீதத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More : தமிழ்நாட்டில் அறிக்கை வெளியானால் 500 பேருக்கு மேல் பாலியல் புகாரில் சிக்குவார்கள்..!! புயலை கிளப்பிய நடிகை ரேகா நாயர்..!!

English Summary

It is said that only the skeleton of a child was present in the stomach of the young woman, which has caused great shock among the doctors.

Chella

Next Post

செக்...! வகுப்புக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரியின் அங்கிகாரம் ரத்து...!

Tue Sep 3 , 2024
B.Ed. Colleges where students appear for the exam without appearing will be de-recognised

You May Like