fbpx

இங்கிலாந்து அரசரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் …

இங்கிலாந்து ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னரான சார்லஸ் உருவம்பொறிக்கப்பட்ட நாணயம் அந்நாட்டில் வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது 96 வயதில் செப்டம்பர் 8ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து 3ம் சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தேசிய கீதத்திலும் புதிய மன்னருக்கு ஏற்றவாறு வார்த்தைகள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களில் , நாணயங்களில் புதிய மன்னரின் உருவம் பொறிக்கப்பட வேண்டும். மன்னர் 3-ம் சார்லஸ் உருவம் பொறித்த நாணயங்களை ராயல்மிண்ட் வெளியிட்டுள்ளது.

பாரம்பரியத்திற்கு ஏற்பட மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கம் உள்ளது. இனி இந்த நாணயமும் புழக்கத்தில் கொண்டுவரப்படும். எனினும் ராணியின் உருவம்பொறிக்கப்பட்ட நாணையமும் புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற டிசம்பர் மாதம் முதல்இந்த நாணயம் படிப்படியாக புழக்கத்தில் கொண்டு வரப்படும் என்று ராயல் மிண்ட் தகவல் அளித்துள்ளது. புதிய மன்னர் உருவ நாணயங்களை பார்ப்பதில்மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Post

பெங்களூரு நடைமேடை டிக்கெட் இரு மடங்கு உயர்வு

Sat Oct 1 , 2022
பெங்களூருவில் முக்கிய ரயில்வே நடைமேடைகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 31 ம் தேதி வரை நடைமேடைக் கட்டணம் ரூ.10லிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ’’ நடைமேடை டிக்கெட் கட்டணம் யஷ்வந்த்பூர் , கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையம் எம்.பி. டெர்மினல்  உள்ளிட்ட ரயில்வே நடைமேடைக் கட்டணங்கள் ரு.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள கட்டணம் வரும் 31ம் […]

You May Like