fbpx

பூந்தமல்லியில் பற்றி எரியும் குளிர்பான கிடங்கு..!! திடீரென வெடித்து சிதறுவதால் பரபரப்பு..!! பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல்..!!

சென்னை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூட்டியிருந்த குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் குடோனில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீவிபத்து காரணமாக குடோனில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் ஏதேனும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடோனில் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத்துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்தும் பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயை முழுமையாக அணைத்த பிறகே சேதமான பொருட்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Read More : சற்றுமுன்..!! கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்..!! நாளை திண்டாடப்போகும் சமையலறைகள்..!! இன்றே சிலிண்டரை வாங்கிக்கோங்க..!!

English Summary

A massive fire has broken out at a private cold storage facility operating on the Chennai Poonamallee-Bangalore National Highway.

Chella

Next Post

"மார்பகங்களை தொடுவது பாலியல் குற்றமல்ல" அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

Wed Mar 26 , 2025
Explained: Allahabad HC’s controversial ‘grabbing breasts not rape’ order paused by Supreme Court

You May Like