fbpx

தேர்வெழுதிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவி சுட்டுக்கொலை..!! பரபரப்பான சாலையில் பதறவைத்த சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரை சேர்ந்தவர் ரோஷ்னி (21). இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பிஏ படித்து வந்தார். இந்நிலையில், ரோஷ்னி கல்லூரியில் நேற்று தேர்வு எழுதியுள்ளார். காலை தேர்வு எழுதிவிட்டு ரோஷ்னி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரோஷ்னியை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ரோஷ்னியை சரமாரியாக சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரும் அங்கிருந்து பைக்கில் உடனடியாக தப்பிச்சென்றனர்.

கல்லூரி மாணவி ரோஷ்னி பட்டப்பகலில் நடு ரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. காவல் நிலையம் அருகே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி ரோஷ்னியை சுட்டுக்கொன்றது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

தமிழ்நாட்டில் மீண்டும் எப்போது மழை பெய்யும்..? வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Tue Apr 18 , 2023
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. […]

You May Like