fbpx

‘எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருக்கும் போட்டியாளர்’..!! இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் ஒரே சண்டையும், சச்சரவுமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் ரசிகர்களுக்கும் பார்ப்பதற்கு நல்ல இன்ட்ரெஸ்டாக இருந்தது. ஆனால், இந்த வாரம் கொஞ்சம் நார்மலாக போவதால், பிக்பாஸ் ஒரு திட்டத்தை போட்டு ஆட்டத்தை குழப்பியுள்ளார். இந்த வாரம் பிக்பாஸ் சீக்ரெட் டாஸ்க்கை கொடுத்தார்.

அதை தொடர்ந்து வீடு மீண்டும் பதட்ட நிலைக்கு வந்தது. மேலும், நேற்றைய எபிசோடில் தினேஷ் விஷ்ணுவின் சண்டை தான் உச்சகட்டமாக இருந்தது. இப்படி சுவாரசியமாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா, மணி, ஆர்.ஜே. பிராவோ, பூர்ணிமா, அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் அதிகபட்சமாக விசித்ராவுக்கு தான் ஓட்டுகள் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரவீனா, மணி, பிராவோ, பூர்ணிமா ஆகியோர் கணிசமான ஓட்டுக்களை பெற்றுள்ளனர். இதில் கடைசி 3 இடம் அக்ஷயா, கானா பாலா, விக்ரம் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் எதற்கு இருக்கிறோம் என்று தெரியாமல் செட் ப்ராப்பர்ட்டி போல் இருக்கும் ஒருவர் தான் விக்ரம். அதனாலேயே பிக்பாஸ் கதவை மூடவாவது இவரை பயன்படுத்திக் கொள்வோம் என்று வேலை வாங்கி வருகிறார். இந்நிலையில், ஒரு வேலை விக்ரம் வெளியே போனாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை.

Chella

Next Post

’இனி உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, நேரத்தை குறிப்பிட வேண்டும்’..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Thu Nov 16 , 2023
ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு ‘ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயது இளம்பெண், திடீரென உயிரிழந்தார். கெட்டுப்போன பொருட்களால் ஷவர்மா தயாரித்ததால் தனது மகள் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. […]

You May Like