fbpx

தூங்கிக் கொண்டிருந்த மாணவியை.. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர இளைஞன்…!

ஜார்கண்ட் மாநிலத்தில் தும்கா மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த கட்டுமானதொழிலாலி ஷாரூக் என்கிற இளைஞர் காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளார்.   மாணவி அவரின் காதலை மறுத்துள்ளார். மாணவியின் செல்போன் எண்ணை எப்படியோ வாங்கிய ஷாரூக் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் மாணவி கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார்.  இந்த நிலையில் கடந்த 22 -ஆம் தேதி மாணவியின் செல்போனுக்கு பேசிய ஷாருக்,  காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இந்த விவகாரத்தை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்த மாணவி உடனே பெற்றோரிடம் ஷாரூக் மிரட்டலை சொல்லி அழுதுள்ளார்.  நடந்ததை எல்லாம் கேட்ட மாணவியின் தந்தை, மகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். நாளை காலை பொழுது விடிந்ததும் ஷாரூக் பெற்றோரிடம் நாங்கள் சென்று பேசுகிறோம். பிரச்சினையை சமாதானப்படுத்தி விடுகிறோம்  என்று சொல்லி மகளை தூங்க வைத்துள்ளார்.

இந்நிலையிவ் அதிகாலையில் திடீரென்று மாணவியின் வீட்டிற்குள் நுழைந்த ஷாருக், தூங்கிக் கொண்டிருந்த மாணவியின் உடலில் பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி அலறி துடித்த மாணவியை பார்த்துவிட்டு ஷாருக் தப்பி ஓடிவட்டார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் எரிந்து கொண்டிருந்தவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.   இதில் அந்த மாணவி மயங்கி கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உடல்  90% வெந்து விட்டது அதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர்.  ஆனாலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஷாருக்கை காவல்துறையினர் கைது செய்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியல் செய்தனர். காவல்துறையினர் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தினை கைவிட வைத்தனர்

Baskar

Next Post

’கனியாமூர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதற்கான எந்த ஆதாரமும் இல்லை’..! - ஐகோர்ட்

Mon Aug 29 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 5 பேருக்கும் நிபந்தனைகள் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை ஜூலை 17ஆம் தேதி கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு […]
மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க பெற்றோர் மறுப்பு..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

You May Like