fbpx

திகிலுக்கு பஞ்சமில்லாத இருட்டு உணவகம்!… வாடிக்கையாளருக்கு மதுபானத்தில் தனது ரத்தத்தை கலந்து கொடுத்த பெண்!…

ஜப்பானில் உள்ள உணவகத்தில் பணிப்பெண் ஒருவர் தனது ரத்தத்தை மதுபானத்தில் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் உள்ளது ஒக்கைடோ தீவுக்கூட்டம். இங்குள்ள சுசுகீனா என்ற பகுதிதான் இந்த ஒக்கைடோ தீவுக்கூட்டத்தின் சொர்க்க பூமி. கேளிக்கை விடுதிகள், ஆடம்பர நட்சத்திர ஓட்டல்கள் என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடம்தான் சுசுகீனா.இங்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராலமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.இங்கு ‘மொன்டாஜி கான் கஃபே’ என்ற பெயரில் ஒரு ஆடம்பர ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது.

இந்த ரெஸ்டாரண்ட் பார்ப்பதற்கே திகில் நிறைந்ததாக இருக்கும். இந்த ஹோட்டலில் வேலை செய்பவர்கள் பேய்களை போல வினோதமான தோற்றத்தில் ஆடைகள் அணிந்திருப்பர். ஒரே இருட்டு, மைனஸ் டிகிரி ஏசி, மெல்லிய பியானோ இசை, ஆங்காங்கே சிறு சிறு விளக்குகள் என பார்க்கவே ‘பேய் பங்களா’ மாடலில் இந்த ரெஸ்டாரண்ட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வேலை செய்யும் பெண் ஊழியர்களும் கருப்பு லிப்ஸ்டிக்கும், தலைவரி கோலமுமாக இருப்பார்கள்.

இந்நிலையில், இந்த ரெஸ்டாரண்ட்டில் மது பரிமாறும் பணிப்பெண் (waitress) ஒருவருக்கு விபரீத பழக்கம் இருந்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களுக்கு மது பரிமாறும் போது, தனது விரல் மற்றும் கையில் பிளேடை வைத்து கிழித்து விடுவாராம். இதில் காயத்தில் இருந்து கொட்டும் ரத்தத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் மதுவில் கலந்து விடுவாராம். வாடிக்கையாளர்களும் இது தெரியாமல் அப்படியே குடித்துவிடுவார்கள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணிபுரியும் இப்பெண், இத்தனை ஆண்டுகளாக இந்த விபரீத காரியத்தை செய்து வந்துள்ளார். ரெஸ்டாரண்ட்டே இருட்டாக இருப்பதால், இவர் இப்படி செய்வதை யாரும் கண்டுபிடிக்காமல் இருந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த வாரம் வழக்கம் போல கஸ்டமர்களின் மதுவில் ரத்தத்தை சொட்டு சொட்டாக கலந்து கொண்டிருந்த போது, வாடிக்கையாளர் ஒருவர் இதை பார்த்துவிட்டார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, அவரையும் மிரட்டும் தொனியில் அப்பெண் பேசியிருக்கிறார்.

ஏற்கனவே ரெஸ்டாரண்ட்டே ஒரு மார்க்கமாக இருக்க.. பயத்தில் அடித்து பிடித்து வெளியில் ஓடி இருக்கிறார் அந்த நபர்.பின்னர், இதுகுறித்து தனது நண்பர்களிடம் அவர் கூற, ரெஸ்டாரண்ட் நிர்வாகத்துக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண் ஊழியரிடம் விசாரித்த போது, அவரும் கூலாக ‘ஆம்’ எனக் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அப்பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்த ரெஸ்டாரண்ட் நிர்வாகம் அவர் மீது போலீஸிலும் புகார் அளித்தது.

Kokila

Next Post

போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்!... மத்திய அரசு அறிவிப்பு!

Wed Apr 19 , 2023
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் இனி ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமின்றி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முடிவின்படி, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, […]

You May Like