ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, மே 21 அன்று இந்திய அரசு அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.
ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் இன்று காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததால், மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மே 21ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அன்றைய தினம் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது என்று MHA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்..’ இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!