fbpx

அமெரிக்காவில் பரவி வரும் கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை!… மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை!

அமெரிக்காவில் சிகிச்சையளிப்பதற்கு கடினமாக இருக்கும் ஒரு கொடிய பூஞ்சை தொற்று அபாயகரமான நிலையில் வேகமாக பரவிவருகிறது என்று மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் தற்போது கேண்டிடா ஆரிஸ் எனப்படும் பூஞ்சை மூலமாக புதிய நோய் தொற்று உருவாகியுள்ளது. Candida auris ஒரு வகை ஈஸ்ட் ஆகும், இது பலவீனமான நோயெதிர்ப்பு திறன் உள்ளவர்களின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவினால், அது ஆபத்தான அச்சுறுத்தலாக இருக்கும் என்று மத்திய நோய் கட்டுப்பாடு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில், இந்த பூஞ்சை தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்களில் 30 சதவீதம் முதல் 60 சதவீதம் பேர் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

அசுத்தமான பரப்புகளில் இருந்து மற்றும் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு இந்த தொற்று பரவக்கூடியது. அமெரிக்காவின் பாதி மாகாணங்களில், ஏன் அதைவிட அதிகமாகவே தற்போது இந்த கேண்டிடா ஆரிஸ் என்னும் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுடைய வயதானவர்களை பாதிக்கும் இந்த கேண்டிடா ஆரிஸ் என்னும் பூஞ்சை, உலக சுகாதாரத்துக்கு மோசமான அச்சுறுத்தல் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சை, சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக் கொல்லி மருந்துகளைக் கொண்டு செய்யப்படும் சிகிச்சைக்கு கட்டுப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இந்த கிருமி தாக்குவதால், ஒருவருக்கு இந்த கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது.மேலும், இந்த கேண்டிடா ஆரிஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உயிரிழக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த பூஞ்சை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மேலும் அமெரிக்காவில் 2016 முதல் , 2021 வரை மொத்தம் 7,413 இந்த நோய் தொற்று உறுதியாகி உள்ளதாக நோய் கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் இந்த பூஞ்சையின் பாதிப்பு மூன்று மடங்காக பெருகியுள்ளது என்று சுகாதார மையம் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த கேண்டிடா ஆரிஸ் எனப்படும் பூஞ்சை பாதித்தவர்களை எளிதில் குணப்படுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

இரவில் தூங்கும்போது தொப்புளில் இதை செய்யுங்கள்!... பல நோய்களில் இருந்து தீர்வு!... நல்ல தூக்கம் வரும்!

Thu Mar 23 , 2023
இரவில் தூங்கும் போது தொப்புளில் எண்ணெய் விடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நமது உடலின் மையப் புள்ளி தொப்புள். இது 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகளின் பிணைப்பில் காணப்படுகின்றது. தொப்புளுக்கும் உடலின் ஏனைய பாகங்களுக்கு தொடர்பு உண்டு. இவ்வாறு விளங்கும் தொப்புளுக்கு இரவில் எண்ணெய் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அதன்படி, தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்றவை நீங்கி […]

You May Like