fbpx

”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது”..!! சென்னைக்கு சரியான சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

வங்க கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, பின்னர் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டது.

இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், சென்னைக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read More : இனி ரயிலில் டிக்கெட் எடுத்தால் மட்டும் போதாது..!! இதையும் எடுத்துச் செல்ல வேண்டும்..!! இல்லையென்றால் அபராதம்..!!

English Summary

The India Meteorological Department has reported that the low-pressure area that formed in the Bay of Bengal has strengthened into a deep depression.

Chella

Next Post

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணமா..? அவரது மனைவியே கொடுத்த பரபரப்பு பேட்டி..!!

Wed Dec 18 , 2024
"Over time, everyone got vaccinated. Not all of them died. So, it cannot be said that the vaccine was the cause of Vivek's death," he said.

You May Like