மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், இன்றும், நாளையும் கோவையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 26) கோவை மாவட்டம் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ்.கல்லூரி வளாகத்தில் விஜய் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில் தவெக பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகம் 100 வருடங்களுக்கான கட்சியாக மாற உருவாக்கும் நாள் இன்று. மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான். ஒரு புயல் இன்று கோவையை நெருங்கிய நேரத்தில் மக்களே கட்சியின் கட்டமைப்பு என்பதை உறுதி செய்தார்கள். கோவையில் ரோடு ஷோவை உருவாக்கிய தவெக அல்ல; பெண்கள் தான். இந்த வரவேற்புதான் 2026 தேர்தலுக்கு முன் உள்வாங்கி உள்ளோம். தமிழக அரசியலில் இளைஞர்களால் தான் மாற்றம் உருவானது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்களிடம் அரசியல் ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களை உருவாக்கியதே இளைஞர்கள் தான். ஊழல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து தவெக போராடும்” என்று தெரிவித்தார்.
Read More : உலகை விட்டு மறைந்தார் போப் பிரான்சிஸ்..!! புனித மேரி மேஜர் பசிலிக்கா தேவாலயத்தில் உடல் நல்லடக்கம்..!!