இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் 15 வயது மாணவன் ஒருவனின் ஆசனவாயில் தற்செயலாக கடப்பாரை புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடிசா மாநிலத்தின் கோந்தமாள் மாவட்டத்தைச் சார்ந்த கவர்னகிரி பகுதியில் வசித்து வரும் நபர் சக்தி படகுரு. 15 வயது சிறுவனான இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களது பள்ளியில் கட்டுமான பணி மற்றும் பராமரிப்பு பணியை நடந்து வருவதாக தெரிகிறது இதற்காக ஆங்காங்கே உடைந்து இருக்கும் பழைய கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதற்காக சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொத்தனார் மற்றும் மேஸ்திரிகள் இங்கு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் வகுப்பறைக்கு சென்று இருந்த மாணவன் சக்தி படகுரு தனது வகுப்பறையின் மேலிருந்த சிமெண்ட் செதில்களை ஒதுக்குவதற்காக மேலேறி சென்றிருக்கிறார். இவர் சிமெண்ட் செதில்களை ஒதுக்கி கொண்டிருக்கும் போது தவறுதலாக அங்கிருந்து கீழே விழும்போது அந்தக் கட்டிடத்திற்கு அருகே தொழிலாளி ஒருவர் தனது கடப்பாரையுடன் உட்கார்ந்து இருந்திருக்கிறார் இந்த மாணவர் மேலிருந்து கீழே விழுந்து நேரடியாக கடப்பாறையில் உட்கார்ந்து உள்ளார். இதனால் கடப்பாரை அவரது ஆசன வாய்க்குள் சென்று விட்டது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் அங்கு நான்கு மணி நேரம் போராடி அவனது ஆசனவாயில் இருந்து கடப்பாரை அகற்றப்பட்டது தற்போது மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .