பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமலேயே கிரீஸ் நாட்டைச் சார்ந்த ஒருவர் 82 ஆண்டு காலமாக வாழ்ந்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போது உலகை அதிரசெய்திருக்கிறது. ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டைச் சார்ந்தவர் மிஹைலோ டோலோடோஸ். இவர் பிறந்த சிறிது நாட்களிலேயே இவர் தாயார் இறந்து விட்டதால் ஆதோஷ் மலையில் உள்ள மடாலயத்தைச் சார்ந்த ஆர்த்தடாக்ஸ் துறவிகள் இவரை தத்தெடுத்து வளர்த்திருக்கின்றனர். அவர் அந்த பகுதியில் கடுமையான மதக்கட்டுப்பாட்டுகளளில் வளர்க்கப்பட்டு இருக்கிறார். அங்கு பெண்கள் செல்வதற்கு அனுமதியே இல்லையாம். இதன் காரணமாக அவர் பெண்கள் என்றால் என்னவென்று தெரியாமல் 82 ஆண்டுகளாக வாழ்ந்து இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் அந்த மலைப்பகுதியை விட்டு பறந்த உலகத்திற்கு வந்து எதிர்ப்பாலினத்தை சந்தித்து வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தனது ஆர்த்தடாக்ஸ் கொள்கையிலிருந்து மாறாமல் அந்த மலைப்பகுதியிலேயே வாழ்ந்து மரணம் அடைந்திருக்கிறார். இவரது இறப்பை பற்றிய செய்தி அன்னாளில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. 1856 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1938 ஆம் ஆண்டில் மரணமடைந்துள்ளார்.
ஆதோஷ் மலையின் அனைத்து மடாலயங்களிலுமிருக்கும் துறவிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையின் நிறைவு செய்வதை உறுதி செய்வது இங்கு உள்ள விதியாகும். இங்கு உள்ள துறவிகள் டோலோடோஸ் பெண் என்பவர் எப்படி இருப்பார் என்று தெரியாமலேயே இறந்த முதல் துறவி என நம்பினர். இந்த மடாலயங்களுக்குள் பெண்கள் செம்மறியாடு பசுமாடு ஆகியவை நுழைவதற்கு கட்டுப்பாடுகள் பத்தாம் நூற்றாண்டிலேயே விதிக்கப்பட்டிருக்கிறது . இன்று மவுண்ட் அதோஸ் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.