fbpx

600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்!

பிரபல ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் திட்டங்களை ரத்து செய்ததை அடுத்து, பணியாளர்களில் 600 பேரை அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.

உலகின் தலைசிறந்த டெக் நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள் நிறுவனம். பிப்ரவரி மாத இறுதியில், இந்த நிறுவனம் தனது இரு முன்னோடி முயற்சிகளையும் நிறுத்தத் தொடங்கியது. டெஸ்லாவுக்கு போட்டியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் கார் திட்டம், முதலீடு அதிகரிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டது. பொறியியல் சவால்கள், சப்ளையர்களின் ஒத்துழையாமை ஆகியவற்றால் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டத்தை மூடச் செய்தது.

அதனைத்தொடர்ந்து, இப்போது 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது டெக் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாக கொண்ட ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய கார் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் டிஸ்ப்ளே திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த பணி நீக்கத்தை கையில் எடுத்துள்ளது. கலிபோர்னியா மாகாண வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறையிடம் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்த தரவுகளில் இருந்து இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பை முடித்தவர்களில் கனவுகளில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தில் அதிரடியாக 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

’கோடை வெயிலில் மறந்தும் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க’..!! மத்திய அரசு எச்சரிக்கை..!

Fri Apr 5 , 2024
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெப்பத்தை சமாளிக்க முடியாமல், பொதுமக்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் – ஜூன் வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. வெப்பத்திலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சுகாதார அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் […]

You May Like