நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி பல வாரங்கள் கடந்தும், தற்போது வரை மக்கள் திரையரங்குகளுக்கு சென்று மகாராஜா படத்தை பார்த்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்ய பாரதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
நான் லினியர் முறையில் ஆழமான கருத்தை சொல்லும் திரைக்கதையின் மூலம் மக்கள் நெஞ்சங்களில் கனத்தை ஏற்படுத்தியது இப்படம். இதுவரை இந்த படம் ரூ. 81 கோடி வசூலை குவித்துள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில், மகாராஜா திரைப்படம் எப்போது ஓடிடி தலத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 19ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
Read More : BREAKING | கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா..? என்னதான் நடக்கிறது திமுகவில்..? பெரும் பரபரப்பு..!!