கள்ளக்காதலனின் துணையுடன் கணவரின் கழுத்து துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்துவிட்டு, உடலை கால்வாயில் தூக்கி வீசிய யூடியூபரான அவரது மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் பிவானியை சேர்ந்தவர் ரவீணா. இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இதனால், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். ரவீணாவுக்கும், பிரவீன் என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் தான், ரவீணாவுக்கு சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவரும் சேர்ந்து வீடியோக்கள் எடுத்துள்ளனர். பின்னர், அதை ரவீணா தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார். இந்த வீடியோக்களுக்கு பலரும் ஆபாசமாக கமெண்ட் போட்டு வந்ததால், இதனைப் பார்த்த கணவர் பிரவீன், ரவீணாவை கண்டித்துள்ளார். மேலும், இனி சுரேஷுடன் இணைந்து வீடியோ போடக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால், கணவர் பேச்சை கேட்காமல் ரவீணா தொடர்ந்து சுரேஷுடன் வீடியோ போட்டு வந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தான், ரவீணாவுக்கும் சுரேஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருநாள் எப்போதும் போல, வீட்டிற்குள் நுழைந்த பிரவீன், தனது மனைவியும், சுரேஷுடன் ஒன்றாக படுக்கையறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், உடனே அங்கிருந்து சுரேஷ் தப்பியோடிவிட்டார்.
இது தொடர்பாக கணவன் – மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இப்படியே போனால் இனியும் சுரேஷுடன் நினைத்த மாதிரி வாழ முடியாது என கருதிய ரவீணா, அன்றிரவே தனது கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர், தூங்கிக் கொண்டிருந்த கணவரின் அறைக்கு சுரேஷுடன் சென்று, அவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து, இருவரும் பிரவீனின் உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீடு திரும்பியுள்ளனர். பிரவீன் நீண்ட நாட்களாக வீட்டிற்கு வராததால், குடும்பத்தினர் சந்தேகமடைந்தனர். ரவீணாவிடம் இதுகுறித்து கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். தொடர்ந்து, ரவீணாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், போலீசில் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். இதற்கிடையே, கால்வாயில் இருந்த உடல் பிரவீனுடையது அடையாளம் காணப்பட்டது.
மேலும், ரவீணாவும் சுரேஷும் , பிரவீனின் உடலை கோணிப்பையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் வீடியோ வைரலானது. இதையடுத்து ரவீணாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, பிரவீனை கொலை செய்த மனைவி ரவீணாவை போலீசார் கைது செய்த நிலையில், கள்ளக்காதலன் சுரேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்..!! தங்கம், வெண்கல பதக்கங்களை வாரி குவிக்கும் இந்தியா..!!