தாயின் இறுதிச்சடங்கு நடத்தி முடித்து சில மணி நேரங்களிலேயே அரசின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை ஹௌரா முதல் நியூ ஜெல்பைகுறி வரை இயக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி, மேற்குவங்கம் செல்வதாக இருந்தது. ஆனால், இன்று காலை பிரதமர் மோடியின் தாயார் காலமானதை தொடர்ந்து அவர் அகமதாபாத் சென்றார். இறுதிச் சடங்கை முடித்ததற்கு பிறகு திட்டமிட்டபடி ரயில் சேவையில் தொடக்க நிகழ்ச்சியில் அவர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ”தாயை இழந்து வாடும் பிரதமருக்கு தான் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் இவ்வளவு கடினமான சூழலிலும் பணி செய்ய வந்திருக்கும் கடமை உணர்ச்சியை பாராட்டுவதாகவும் சிறிது நேரம் நிச்சயமாக பிரதமர் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இன்றைய தினமே நமானி கங்கை திட்டத்திற்காக மேற்கு வங்கம் பீகார் உத்தர பிரதேஷ் உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநில முதல்வர்களுடன் கொல்கத்தாவில் உள்ள இந்திய கப்பற்படையின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.