fbpx

வாகன ஓட்டிகளே கவனம்… இதை அணியாமல் சென்றால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்…! இது வரை 2,405 நபர்களுக்கு விதிப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி சமிபத்தில் தெரிவித்தது.

அதன் அடிப்படையில்; முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் குழுக்களின் மூலம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,405 நபர்களுக்கு ரூ.12,02,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை மெட்ரோ இரயிலில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பயணிக்க வேண்டுமென்றும்‌, மெட்ரோ இரயில்‌ நிலையங்களுக்கு வந்து செல்லும்‌ பயணிகளும்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌ என்று சென்னை மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ அறிவித்துள்ளது.

Also Read: எல்லாரும் கவனம்… 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல்…! ஆன்லைன் மூலம் மட்டுமே… அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!

Vignesh

Next Post

Tnpsc Group-4: மொத்தம் 7,301 காலிப் பணியிடங்கள்... எழுத்து தேர்வு குறித்து தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு...! முழு விவரம் உள்ளே...

Sat Jul 23 , 2022
தமிழகம் முழுவதும் நாளை 38 மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவலில், அரசின் குரூப் 4 நிலையில் உள்ள 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மார்ச் 30 ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை காலை 9.30 மணி முதல் 12:30 மணி […]

You May Like