உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும். கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகா கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது சிலி நிமிடங்களில் அருகிலுள்ள பல பந்தல்களுக்குப் பரவியது. தீ விபத்து ஏற்பட்டவுடன், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடும் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்தில் பல கூடாரங்கள் எரிந்து நாசமடைந்த நிலையில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஜூன்சி சட்நாக் காட் நாகேஷ்வர் காட் செக்டார்-22 அருகே, கண்காட்சிப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 15க்கும் மேற்பட்ட கூடாரங்கள் எரிந்து சாம்பலானது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கும்பமேளா பகுதியில் இது மூன்றாவது தீ விபத்து ஆகும்.