fbpx

’மூளையே இல்லாத முட்டாப்பையன்’..!! ரவீனாவின் விளையாட்டால் கடுப்பான மணி..!! வறுத்தெடுத்த பூர்ணிமா..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் மணி – ரவீனா. இவர்கள் இருவரும் கேம் விளையாட வந்தார்களா? ரொமான்ஸ் பண்ண வந்தார்களா? என்கிற கேள்வி அங்குள்ள போட்டியாளார்களுக்கே உள்ளது. அந்த அளவுக்கு இருவரும் எப்போதுமே ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். இதனால் கடுப்பான ஹவுஸ்மேட்ஸ் இதை காரணமாக வைத்தே இருவரையும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளனர்.

இருவரும் ஒரே வீட்டில் இருந்தால் தான் பிரச்சனை என்று, மணியை தூக்கி ஸ்மால் பாஸ் வீட்டில் போட்டு பார்த்தார் கேப்டன் பூர்ணிமா. ஆனால், அங்கு போன பின்னர் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் ஓவராகிவிட்டது. இந்நிலையில், பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கில் மணி-ரவீனா இடையே சண்டை வெடித்துள்ளது. இவர்களது ரொமான்ஸை பார்த்து கடுப்பாகி தான் பிக்பாஸ் அப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இருவரின் வீடியோக்களை பார்த்து, அதில் யாருடைய வீடியோ பிடித்திருந்தது என நினைப்பவருக்கு லைக்கும், பிடிக்காதவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். இதில் ரவீனாவுக்கு மணி மற்றும் பிரதீப் வீட்டில் இருந்து வந்த வீடியோவை ஒளிபரப்பி இருந்தனர். இதில் பிரதீப்பின் வீடியோ பிடித்ததாக கூறி அவருக்கு லைக் கொடுத்துவிட்டார் ரவீனா.

அவர் விளையாட்டை விளையாட்டாக விளையாடியது மணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் தனக்கு லைக் கொடுக்காததால் கடுப்பாகினார். இதனால், ரவீனாவுடன் மணி சண்டை போட்டுள்ள புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இதை அங்கிருந்து பார்த்த கேப்டன் பூர்ணிமா, ரவீனா கேமை சரியாக விளையாடியதாக பாராட்டி பேசியதோடு, மணி மூளையே இல்லாத முட்டாப்பய என சாடி உள்ளார்.

Chella

Next Post

ஷாக்கிங்..!! சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிப்பு..!! கொரோனா போல் மனிதர்களை தாக்கும் அபாயம்..!!

Wed Oct 25 , 2023
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி […]

You May Like