fbpx

குப்பையில் கிடந்த அதிர்ஷ்டம்!… வேலைக்காரரால் கோடீஸ்வரரான அமெரிக்கர்!

அமெரிக்கர் ஒருவருக்கு வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ.8.30 கோடி பரிசு விழுந்துள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் மேட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் சவுசா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர், 15 மில்லியன் டாலர் பரிசுக்கான ‘மணி மேக்கர் ஸ்கிராட்ச்’ டிக்கெட்டை வாங்கியுள்ளார். டிக்கெட்டை வாங்கிய கலீல் சவுசா, அதனை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் அந்த லாட்டரி டிக்கெட்டை எங்கு வைத்தோம் என்பதை மறந்து விட்டார். எங்கு தேடியும் கிடைக்காததால் லாட்டரி டிக்கெட்டை தேடும் பணியை கலீல் சவுசா விட்டுவிட்டார்.

இதையடுத்து, வழக்கம்போல் வீட்டை சுத்தம்செய்துக்கொண்டிருந்த வேலைக்காரர், பாத்திரத்தில் இருந்து லாட்டரி சீட்டை எடுத்துக்கொண்டு கலீல் சவுசா கொடுத்தார். இதையடுத்து லாட்டரி டிக்கெட்டை அதிகாரிகளிடம் ஒப்படைத்தபோது, அதற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசை வென்றது தெரிய வந்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த கலீல் சவுசாவுக்கு, வரி பிடித்தம் போக 6,50,000 டாலர் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பில் இதன் மதிப்பு 8.30 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். பரிசுத் தொகையை பெற்றுக்கொண்ட கலீல் சவுசா அதனை தேவைப்படும் நண்பருக்கு உதவ உள்ளதாகவும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கலீல் சவுசா வென்ற டிக்கெட் மெட்ஃபோர்டு சேலம் தெருவில் அமைந்துள்ள டோனிஸ் கன்வீனியன்ஸ் என்ற கடையில் வாங்கியுள்ளார். வெற்றி பெற்ற டிக்கெட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளர்கள் பரிசு தொகையில் 10,000 டாலர்களை பெறுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கலிபோர்னியாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபர் ஒருவர் 1.73 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயின் 7,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பவர்பால் ஜாக்பாட்டை வென்றார். பவர்பால் லாட்டரி என்பது அமெரிக்காவின் லாட்டரி வரலாற்றில் இரண்டாவது பெரிய ஜாக்பாட் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மாணவர்கள் அதிர்ச்சி..!! 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு..? அமைச்சர் பொன்முடி தகவல்..!!

Mon Oct 30 , 2023
தமிழ்நாட்டில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதால் 11ஆம் வகுப்பு பாடங்களை மாணவர்களுக்கு நடத்தாமல் நேரடியாக 12ஆம் வகுப்பு பாடங்களை […]

You May Like