fbpx

இளைஞருக்கு பெண் வேடமிட்டு கட்டாய பாலியல் தொழிலுக்கு அனுப்பும் கும்பல்..!! கோவையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், வாட்ஸ் அப் மூலம் பலருடன் தொடர்பில் இருந்துள்ளார். சூலூர் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பலுடனும் அவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட அந்த கும்பல், கோவைக்கு கிளம்பி வருமாறு சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துள்ளது. இதனை நம்பி, அந்த சிறுவனும் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார். அவர் கோவை வந்து இறங்கியவுடன் அவரை ஒரு நபர் அழைத்துக் கொண்டு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட்டு ரூ.20,000 பெற்றுக் கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப் நட்பை நம்பி வந்த இளம் வாலிபரை இந்த கும்பல் ஆடைகளை களைந்து பெண்கள் அணியும் உள்ளாடைகளை கொடுத்து தலை முடியை அலங்கரித்து பெண்கள் அணியும் செறுப்பையும் கொடுத்து இளம் பெண் போல மேக்கப் செய்து மாற்றியுள்ளனர். 

மேலும் ஒரு வாரமாக அவரை இரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி ஆண்களிடம் கட்டாய உடலுறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தியுள்ளனர். மேலும், அந்த வாலிபர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினையும், செல்போனையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டது. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த இளைஞர் தனது தந்தைக்கு அருகில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கூறி மெசேஜ் மற்றும் லொக்கேசனை அனுப்பி உள்ளார்.  அதன் அடிப்படையில் சூலூர் வந்த வாலிபரின் குடும்பத்தினர் குறிப்பிட்ட அந்த கும்பலை தேடி சென்றுள்ளனர். அப்போது அது போன்ற ஒரு இளைஞர் தங்களிடம் இல்லை. அவனை நாங்கள் பார்த்ததே இல்லை எனக்கூறி அந்த கும்பல் திருப்பி அனுப்பி விட்டது. இதனை தொடர்ந்து வாலிபரின் குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தியதில், உண்மையை ஒப்புக்கொண்டது.

மேலும், அந்த வாலிபருக்கு பெண்கள் அணியும் ஆடைகளையும், உள்ளாடைகளையும் அணிவித்து அழைத்து வந்த போது அவனது பெற்றோர் கண்ணீர் மல்க வாரி அணைத்துக் கொண்டனர். பிறகு நடந்த சம்பவத்தை அவனது பெற்றோரிடம் கூறி கதறி அழுத வாலிபர், பெற்றோருடனே செல்ல போலீசாரிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாலிபரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Chella

Next Post

காலையில் மனைவி கொலை! ஆஃபிஸ் முடிந்து வரும்போது காவல்துறையிடம் சரண்! காவல்தறை அதிர்ச்சி!

Tue Mar 14 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் காலையில் மனைவியை கொலை செய்து விட்டு எந்தவித பதட்டமும் இல்லாமல் பணிக்கு சென்று வந்த நபரால் அப்பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நலசோபரா என்ற பகுதியைச் சார்ந்தவர் பிரபு விஸ்வகர்மா. இவருக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அனிதாவின் நடவடிக்கைகளின் மீது பிரபுவுக்கு […]

You May Like