fbpx

கள்ளக்குறிச்சி அருகே…..! நிதியுதவி வேண்டுவது போல நூதன முறையில் திருடும் கும்பல்…..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவில் காவலர்கள் குடியிருப்பு எதிரே சுதாகரன் என்பவருக்கு சொந்தமான உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தில் முக கவசம் அணிந்தபடி வந்துள்ளார்.

உணவகத்திற்கு உள்ளே சென்ற அவர் சுற்றிப் பார்த்துவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்தபோது கடையில் பெண் உரிமையாளர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று ஒரு துண்டு சீட்டை காட்டி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் வைத்திருப்பதாகவும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனவும் சைய்கையின் மூலமாக கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் உரிமையாளர் முன்பக்கமாக வந்து நில்லுங்கள், ஏதாவது உதவி வேண்டுமா? சாப்பிடுகிறீர்களா? என கேட்டபோது அந்த மர்ம நபர் தான் வைத்திருந்தால் நீளமான குறிப்பு ஏற்றை எடுத்து மேஜையின் மீது இருந்த செல்போன் மீது வைத்து காட்டியுள்ளார். பெண் உரிமையாளர் அந்த குறிப்பேட்டை பார்த்துக்கொண்டிருந்தபோது, மேஜை மீது வைத்திருந்த செல்போனை அந்த மர்ம நபர் திருடி சென்று இருக்கிறார். இது அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

அந்த நபர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் கடை உரிமையாளர் செல்போனை தேடிய போது செல்போன் காணாமல் போயிருந்தது. உடனே கண்காணித்து கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது அதில் அந்த நபர் செல்போனை திருடிய செயல்கள் பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் வழங்கிய புகாரின் அடிப்படையில், சங்கராபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தின் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் சங்கராபுரம் பகுதியில் அதிகரித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

Next Post

திருவண்ணாமலை அருகே….! மின்கம்பியை அகற்ற 2000 ரூபாய் லஞ்சம் உதவி மின்பொறியாளர் கைது…..!

Fri May 26 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்துள்ள ஆலந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். அதே கிராமத்தில் அவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். இவருடைய வீட்டுமனை வழியாக மின்சார கம்பி பாதை செல்வதால் வீடு கட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் தடை பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மின்சார கம்பி பாதையை அகற்றி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார். மின்சார கம்பியை […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like