fbpx

திடீரென வெடித்த சிதறிய எரிவாயு குழாய்..!! விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு..!! அதிர்ச்சி வீடியோ..!!

​மலேசிய புறநகர்ப் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்ததால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பயங்கர தீவிபத்து நிகழ்ந்துள்ளது. தீவிபத்து குறித்த தகவல் அறிந்த உடனே, தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பு வெளியேறிய நிலையில், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தீவிபத்தில் இருந்து 82 பேர் மீட்கப்பட்டுள்ளதானர். பெரும் தீவிபத்து என்பதால் அருகிலுள்ள வீடுகளும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இதனால், அப்பகுதியைச் சுற்றி இருக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தீவிபத்து காரணமாக அப்பகுதியில் இருக்கும் 3 எரிபொருள் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வானத்தை நோக்கி வெடித்துச் சிதறும் எரிவாயு குழாயின் தீ விபத்து வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : குஜராத் கலவர காட்சிகள்..!! எம்புரான் படத்திற்கு தடை போடுங்க..!! கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்ட பாஜக..!!

English Summary

A massive fire has erupted after a gas pipeline exploded in a Malaysian suburb.

Chella

Next Post

TNPSC: 72 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு..!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!

Tue Apr 1 , 2025
The Tamil Nadu Public Service Commission has released a notification for Group 1 posts.

You May Like