fbpx

கோடிகளில் புரளும் தலைமுறை..!! நடிகர் பிரபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

சினிமாவில் கொடிகட்டி பறந்த சிவாஜியின் மகன் பிரபுவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிவாஜி கணேசனுக்கு அடுத்தப்படியாக “மக்கள் திலகம்” என பெயர் எடுத்தவர். பிரபு அப்பாவுடன் சில படங்களில் நடித்திருந்தாலும், “சங்கிலி” படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் அக்னி நட்சத்திரம், பூ விழி ராசா, மை டியர் மார்த்தாண்டம், சின்னத்தம்பி, சின்னவர், உத்தமராசா, மிஸ்டர் மெட்ராஸ் ஆகிய படங்களில் நடித்து மக்கள் நாயகனாக மாறி விட்டார். சினிமாவில் நடிக்கும் காலத்தில் நடிகை குஷ்புவுடன் காதல் வயப்பட்டிருந்தார். காலப்போக்கில் அந்த காதல் முடிவை சந்தித்தது.

இந்நிலையில், சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் பிரபுவின் விவரங்களும் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி கோவை, ஈரோடு, சென்னை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் அவர் வீடு வாங்கியிருக்கிறார். தற்போது திரைப்படங்களில் நடித்து கொண்டு நகைக்கடை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்காக ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குறார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து சொகுசு கார்கள், மண்டபம், காம்ப்ளக்ஸ் ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக பிரபுவின் சொத்து மதிப்பு சுமார் 500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

அதிகரிக்கும் மழைக்கால நோய்கள்!… 3 பேருக்கு மேல் காய்ச்சல் கண்டறிந்தால்!… அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!

Fri Nov 24 , 2023
மழைக்கால காய்ச்சல், நீரினால் பரவக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று இணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ்கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், மழைக்கால […]

You May Like