பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி குடியரசு நாளை கொண்டாட நேற்று பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த அஜய் என்பவன் சிறுமியை வழிமறித்து தனது அறைக்கு இழுத்துச் சென்றுள்ளான். அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வலியால் சிறுமி கதறி துடித்தபோதும், அவரின் சத்தம் வெளியில் கேட்கவில்லை. இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு குற்றவாளி அங்கிருந்து தப்பிச் சென்றான்.
பின்னர், வீடு திரும்பிய சிறுமி, தனக்கு நடந்த கொடுமையை குடும்பத்தினரிடம் விவரித்தார். இதனைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறப்புறுப்பில் அதிகப்படியாக ரத்தப்போக்கு இருந்ததால், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சதர் துணைப் பிரிவு காவல் அதிகாரி (SDPO) ரஞ்சித் குமார் சிங் கூறுகையில், ”சிறுமியை வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டின் அருகில் வசிப்பவர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.