விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பொதுக்குழு உறுப்பினர்களுடன் விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “விஜய் இனி தளபதி அல்ல; வெற்றி தலைவர். குடும்ப ஆட்சியை எதிர்த்த ராமச்சந்திரா பெயரில் உள்ள அரங்கில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் இல்லை; உங்களை வீட்டிற்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி வருகிறோம்.
மக்களை சந்திக்கும் முன்பே தவெகவின் வாக்கு சகவிகிதம் 20 என்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவ விவகாரத்தை திமுக அரசு மூடி மறைத்துள்ளது. அண்ணாமலையை திமுக செட் செய்து வைத்துள்ளது. நமது எதிரி திமுகவும், பாஜகவும் தான். புலி அமைதியாக இருக்கும்போது, ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. உங்கள் அரசியல் பணம் சம்பாதிக்கும் அரசியல் என உதயநிதியை கடுமையாக விமர்சித்தார்.
Read More : BREAKING | ‘தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்’..!! பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!