fbpx

மகிழ்ச்சி செய்தி…! மகளிர்‌களுக்கு ரூ.1 லட்சம் மானியம்…! ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்…. முழு விவரம்

சேலம்‌ மாவட்டத்தில்‌ மகளிர்‌ பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கம்‌ அமைத்திட தாட்கோ மூலம்‌ மானியம்‌ வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் : ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு மாண்புமிகு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பில்‌, 36 ஆதிதிராவிடர்களுக்கும்‌, 4 பழங்குடியினருக்கும்‌ தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ பயன்‌ பெற ஆதிதிராவிடர்‌ பயனாளிகள்‌ https://application.tahdco.com என்ற இணையதளத்திலும்‌, பழங்குடியினர்‌ பயனாளிகள்‌ https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும்‌ பதிவு செய்து பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

School: 2022-23 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால்...! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Sat Oct 15 , 2022
2021-22ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்த 2022-23 கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8,249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1,531 […]

You May Like