கர்நாடகா மாநிலம், ரமணகரா பகுதியில் சிவா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி ஸ்வீட்டி(24), மனைவி ஸ்வீட்டிக்கு, கிரிகோரி பிரான்சிஸ் (27) என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு நாள் கணவன் வீட்டில் இல்லாத போது ஸ்வீட்டி தனது இரண்டு குழந்தைகளுடன் கிரிகோரி பிரான்சிஸ் உடன் சென்றுவிட்டார்.
இதனை அறியாத சிவா தனது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என டிஜே ஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி ஆணும், பெண்ணும் சிறுமியின் சடலத்துடன், ராமநகரில் உள்ள ஏபிஎம்சி அருகே உள்ள மயானத்துக்கு சென்றனர். அங்கிருந்த காவலாளியிடம், உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி, சடலத்தை அடக்கம் செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி, சடலத்துடன் 2 பேரையும் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார்.
இதைதொடர்ந்து, கடந்த 11ம் தேதி, அவர்கள் 2 பேரும், 11 மாத ஆண் குழந்தை சடலத்துடன் மீண்டும் மயானத்துக்கு வந்தனர். அப்போது, அதேபோல் உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டது. நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அறுவை சிகிச்சை செய்தும் உயிர் பிழைக்கவில்லை என தெரிவித்தனர். தொடர்ந்து, முதல் குழந்தை புதைக்கப்பட்ட இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. சடலத்தை அடக்கம் செய்து, இறுதி சடங்குககளை முடித்தனர். இதற்கிடையில், சந்தேகமடைந்த காவலாளி, அவர்களை மீண்டும் தனது செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் அவரிகளிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த ஜூலை மாதம் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர், காதலனுடன் ராம்நகர் வீட்டில் தங்கினார். அந்த நேரத்தில், அவர்களது தகாத உறவுக்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதால், குழந்தைகள் தூங்கும்போது முகத்தில் தலையணையை வைத்து அழுத்து 2 பேரும் கொலை செய்தனர் என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், 2 குழந்தைகளின் உடல்களையும் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Read more ; வரும் 20ஆம் தேதி மீண்டும் சம்பவம் இருக்கு..!! இன்று 8 மாவட்டங்களில் பொளக்க போகும் கனமழை..!!