தைராய்டு பிரச்சனை குறைக்க ஒரு அருமையான பானம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பொதுவாக தைராய்டு பிரச்னை பரம்பரைத் தன்மை காரணமாக வரும். பாட்டி, அம்மா, அம்மாவுடன் பிறந்தவர்கள் அல்லது அப்பாவுடன் பிறந்தவர்கள் இந்தப் பிரச்னை இருந்திருந்தால், அடுத்ததாக வரப்போகிற தலைமுறைக்கும் வர வாய்ப்புள்ளது. தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வரும். அதனை குறைக்க ஒரு அருமையான பானம் பற்றி காணலாம்.
தேவையான பொருட்கள்: தண்ணீர் – ஒரு டம்ளர், கொத்தமல்லி விதைகள் – இரண்டு தேக்கரண்டி, தேன் சுவைக்கு – தேவையான அளவு. செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடானதும், அதனுடன் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்த்து மூடி, மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும், ஆறவைத்து வடிகட்டி அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து விடும்.