fbpx

பெரும் இழப்பு..!! ’பத்மஸ்ரீ’ விருது பெற்ற பிரபல இயக்குனர் ஷாஜி என்.கருண் காலமானார்..!! கண்ணீரில் திரையுலகம்..!!

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.கருண் காலமானார். அவருக்கு வயது 73.

மலையாள சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் ஒருவர் ஷாஜி என் கருண். இவர், மலையாள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் மாநில குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஷாஜி என்.கருண் இயக்கிய ‘Piravi’ (1988), ‘Vanaprastham’ (1999), Kutty Srank (2009) ஆகிய திரைப்படங்கள் தேசிய விருதை தட்டிச் சென்றது.

மேலும், இவர் இயக்கிய Piravi, Swaham மற்றும் Vanaprastham ஆகிய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகி பாராட்டுகளை குவித்தது. திரைத்துறையில் சிறந்து விளங்கிய இவர், கேரள அரசின் வாழ்நாள் சாதனையாளுக்கான உயரிய விருதான ‘JC Daniel Award’ விருதைப் பெற்றவர். மேலும் பல உயரிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார். மேலும், இவரது சேவையை பாராட்டும் விதமாக மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவிரவித்தது.

இந்நிலையில் தான், ஷாஜி என் கருண், நேற்று (ஏப்ரல் 28), தனது 73-வது வயதில் காலமாகிவிட்டார். திரைத்துறையினர் பலரும் ஷாஜி என் கருண் அவர்களுக்கு தங்களது உருக்கமான இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Read More : ’ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’..!! ’இல்லையென்றால் போர் அறிவிப்பு’..!! ராம்தாஸ் அத்வாலே பரபரப்பு பேட்டி..!!

English Summary

Popular Malayalam director Shaji N. Karun has passed away. He was 73.

Chella

Next Post

ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் அனுமதியை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்..! ராமதாஸ் கோரிக்கை

Tue Apr 29 , 2025
The central government should immediately cancel the permission to extract gas in the deep sea..! Ramadoss demands

You May Like