fbpx

செல்பி மோகம்.. அருகே ரயில்.. 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

பாலத்தின் மேலே உள்ள தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுக்கும் போது, ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதியின் பதற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் பாலி சேர்ந்தவர் ராகுல்மேவாடா. இவரது மனைவி ஜான்வி. ராகுல் தனது மனைவியுடன் கோரம்காட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் நின்றுகொண்டு செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலத்தின் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில்வே பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்த தம்பதிக்கு விலகி நிற்கவோ, மறுமுனையை அடையவோ நேரம் இல்லை. இதனை அறிந்த தம்பதி, ரயிலின் மீது மோதுவதை விட கீழே குதித்துவிடலாம் என எண்ணி 90 அடி பள்ளத்தில் கீழே குதித்தனர்.

இதை கண்டு அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். தண்டவாளத்தில் ஆட்கள் நிற்பதை அறிந்த ஓட்டுநர், உடனடியாக அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை உடனடியாக நிறுத்தினார். எனினும், உயிர் பயத்தில் கீழே விழுந்ததில் இருவருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த்னர். ராகுலின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜான்விக்கு கால் முறிவு ஏற்பட்டதுடன், முதுகுத்தண்டு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. அவர் பாலியில் உள்ள பங்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read more | Alert: அடுத்த 3 நேரம் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொட்டப் போகும் கனமழை…!

English Summary

A harrowing video of a couple jumping into a 90-foot ditch after an oncoming train while taking a selfie from the railings above a bridge has gone viral on the internet.

Next Post

வெப்பமடையும் பூமி!. கடலில் மூழ்கும் அந்த 10 நகரங்கள்?. இந்தியாவின் புகழ்பெற்ற நகரமும் மூழ்கும் அபாயம்!

Mon Jul 15 , 2024
A warming earth! Those 10 cities that sink into the sea? The famous city of India is in danger of sinking!

You May Like