Job Camp: சென்னையில் இன்று காலை 8 முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு100-வது வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று காலை 8 முதல் மாலை 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமுக்காக 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தோவு செய்வதற்காக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தோச்சி முதல் பிளஸ் 2 தோச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள், ஐடிஐ தொழில் கல்வி பெற்றவா்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவா்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபா்களுக்கும் பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைத்து வேலை தேடுபவா்களும் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary : In Chennai A employment camp today from 8 am to 3 pm