fbpx

கவனம்…! இன்று காலை 10 மணி முதல்…! வேலை இல்லா இளைஞர்களுக்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…!

தருமபுரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌.

இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்‌. இம்முகாமில்‌, பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துகொண்டு, விற்பனையாளர்‌, மார்க்கெட்டிங்‌ எக்ஸிக்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌ போன்ற பணிகளுக்கு,தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்‌.

பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன. ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள அனைவரும்‌, இன்று காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடேங்கப்பா...!மொத்தம் ரூ.1,250 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு தி.மு.க வழங்கிய நோட்டீஸ்...!

Fri Apr 21 , 2023
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுகவிடம்‌ இருந்து இதுவரை மொத்தமாக ரூ.1,250 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். அண்ணாமலைக்கு திமுக வழங்கிய நோட்டீஸ்: பிஜிஆர் என்ற நிறுவனத்துக்கு மின்வாரியம் பல சலுகைகளை வழங்கி ஊழலுக்கு […]
டெண்டர் விவகாரம்..! அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

You May Like