தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்: Theatre Assistant
காலிப்பணியிடம்: 335
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சம் 32 வயதாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 42 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 50 வயதாகவும், Destitute Widow பிரிவினருக்கு 59 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் விவரம்:
ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
- 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் / இயற்பியல், உயிரியல் பாடங்களுடன் அடங்கிய அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் பணியை ஒரு ஆண்டுகள் நிறைவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு முழுமையாகக் கல்வியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் படிப்பின் அடிப்படையில் 50%, 12ஆம் வகுப்பு அடிப்படையில் 30% மற்றும் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20% என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள Online Registration படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணமாக SC / SCA / ST / DAP(PH) / DW பிரிவினருக்கு ரூ.300 மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.600 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://mrbonline.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.02.2023