fbpx

’இதுவரை யாராலும் முடிக்க முடியாத பயணம்’..!! ’நீண்ட தூரம் நடக்கக் கூடிய பாதை’..!! எங்கு இருக்கு தெரியுமா..?

புதிய இடங்கள் மற்றும் வாழ்விடங்களைக் கண்டறிய மனிதர்களுக்கு உதவிய பழமையான பழக்கங்களில் ஒன்று நடப்பது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பயணங்கள் தொடர்ந்தாலும், இன்னும் கண்டறியப்படாத இடங்கள் பல உள்ளன. தொலைதூர தரிசு நிலங்களிலும், உயர்ந்த மலைகளிலும் கூட மனிதர்கள் தங்கள் கால்தடத்தை பதித்துவிட்டனர். ஆனால், ஒரே ஒரு பயணம் இதுவரை எவராலும் முடிக்க முடியாத பயணமாய் இருக்கிறதாம். அதுதான் பூமியிலேயே நீண்ட நெடிய தொலைவான பயணமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது தென்னாப்ரிக்காவின் கேப் டவுனில் தொடங்கி கிழக்கு ரஷ்யாவின் மகதான் டவுனில் முடிவடைகிறது. உலகிலேயே நீண்ட பயணப்பாதையான இதனை ஒருவர் கூட இதுவரை நடந்து முடித்ததில்லையாம்.

’இதுவரை யாராலும் முடிக்க முடியாத பயணம்’..!! ’நீண்ட தூரம் நடக்கக் கூடிய பாதை’..!! எங்கு இருக்கு தெரியுமா..?

இது நடக்கக்கூடிய பாதை என சொல்லப்பட்டாலும், இதன் மொத்த தொலைவு 22,387 கி.மீ. ஆகும். இந்த வழியில் பயணம் செய்ய பயணிகள், விமானங்கள், படகுகள் மற்றும் கார்கள் என எதையும் நாடவேண்டியதில்லையாம். ரஷ்யா டூ தென்னாப்ரிக்கா வரையிலான இந்த பாதையில் மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் வழியாக 17 நாடுகள் மற்றும் 6 காலங்களை கடந்துசெல்ல நேரிடும். எந்த இடைவெளியும் இல்லாமல் ஒரு நபர் தொடர்ந்து நடந்தால் 182 நாட்களில் இந்த பயணத்தை முடித்துவிடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இது சாத்தியமல்ல. ஒரு மனிதன் ஒருநாளில் 8 மணிநேரம் நடந்தால், 562 நாட்களில் பயணத்தை முடிக்கலாம். இந்த நீண்ட பாதையின் தொலைவானது 13 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்குவதற்கு சமமாம்.

ஆனால், சமீபத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரைப் பறித்த துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது இந்த பாதையை பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாதையானது ரெடிட்டில் பகிரப்பட்ட பின்பு பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

மீண்டும் ஒரு கொடிய வைரஸ்..!! ஒரே நாளில் 9 பேர் மரணம்..!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை..!!

Tue Feb 14 , 2023
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. உயிர் அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். தற்போது தான் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிவரும் நிலையில், மீண்டும் ஒரு கொடிய வைரஸ் மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரசின் பெயர் மார்பர்க். ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியானதாகவும் […]

You May Like