fbpx

பிரேசிலில் 6 சென்டிமீட்டர் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை! அமெரிக்க மருத்துவ நிறுவனம் ஆய்வு!

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ நகரில் அண்மையில் ஒரு பெண் குழந்தை ஒன்று ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்களிடம் ஆச்சரியமும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் நாட்டைச் சார்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அந்தக் குழந்தை முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்கள் அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர். இதன் காரணமாக அந்த குழந்தை அதிசய குழந்தையாக பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் முதுகுத்தண்டு சரியாக வளர்ச்சி அடையாமல் இருப்பதன் காரணத்தால் ஏற்படும் மரபணு கோளாறுகளினால் இவ்வாறான வால் தோன்றுவதாக தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் அந்த குழந்தைக்கு அங்குள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வாழ் அகற்றப்பட்டது. தற்போது அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஓகியோ மாகாணத்தைச் சார்ந்த மருத்துவ ஆய்வு நிறுவனம் ஒன்று பிரேசிலின் மருத்துவர்கள் இடத்தில் குழந்தை சம்பந்தமாக ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டுள்ளது. மருத்துவர்களின் விசாரணையில் அவரது தாய்க்கு போதை பழக்கம் போன்ற எந்த பழக்கங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

இளமை பருவ நோய்களைத் தடுக்க உதவும் விளாம்பழம்!... மருத்துவ பயன்கள் இதோ!

Tue Feb 21 , 2023
ஒவ்வொரு வகை காய்கறிகளும், பழங்களும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நன்மை பயக்கும் சுகாதார பண்புகளைக் கொண்டுள்ளன. அதனடிப்படையில் விளாம்பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்களை பார்க்கலாம் இந்த நவீன காலத்திற்கேற்ப நமது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் விளாம்பழம் உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு […]

You May Like