fbpx

ஒரு கிலோ பருப்பு, கோதுமை இவ்வளவு காசு தானா..? தமிழ்நாட்டிலும் வந்தாச்சு..!! மக்கள் ஹேப்பி..!!

தமிழ்நாட்டிலும் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கியுள்ளது. ஏற்கனவே இத்திட்டம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) ‘பாரத் தால்’ என்ற பெயரில், மானிய விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யவுள்ளதாக கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தது. அதன்படி பருப்பு வகைகள் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில் 1 கிலோ பேக் ஒன்று கிலோ ரூ. 60க்கும், 30 கிலோ மூட்டை ஒரு கிலோ ரூ. 55 என்ற அடிப்படையில் விற்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

இதற்கிடையே, உள்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகளை அதிகரிக்கவும், பருப்புகளின் விலையை குறைக்கவும், துவரம் பருப்பு மற்றும் உளுந்து இறக்குமதிக்கான வரி பூஜ்ஜியம் ஆக வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு குறைத்தது. மசூர் மீதான இறக்குமதி வரி 2024 மார்ச் 31 வரை வரியே இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. மேலும், விலை உயர்வை தடுக்க பருப்புகளை கடைகளில் அதிக ஸ்டாக் வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது.

இந்நிலையில், விலைவாசி உயர்வை குறைக்வும், உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் வட இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. இது தற்போது தமிழ்நாட்டிலும் பாரத் பிராண்ட் பெயரில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடமாடும் வேன்களில் துவரம் பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கோதுமை 27.50 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டிலும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

அடேங்கப்பா.. "ஒரு பெயிண்டிங் ரூ.448 கோடியா..!" '100' ஆண்டுகளுக்கு முன் தொலைந்த ஓவியம்.! ஆஸ்திரிய நாட்டில் கண்டுபிடிப்பு.!

Mon Jan 29 , 2024
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனதாக நம்பப்படுகின்ற, புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் வரைந்த ஓவியம், வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி வியட்னாவின் ஏல இல்லம் ‘இம் கின்ஸ்கி’யால் ஏலம் விடப்பட உள்ளது. புகழ்பெற்ற ஆஸ்திரிய கலைஞர் குஸ்டவ் க்லிம்ட், வரைந்த “போர்ட்ரெய்ட் ஆஃப் ஃபிராலின் லீஸர்” எனப்படும் ஓவியம் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்ததாக நம்பப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் யூத […]

You May Like