fbpx

தனது கிராமத்திற்காக மலையையே குடைந்த கூலி தொழிலாளி!… உத்தரகாண்டில் ஆச்சரியம்!… காரணம் இதோ!

உத்தராகண்ட் மாநிலம் க்வார் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க தனி ஒருவனாக மலையைக் குடைந்து சாலை அமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டம் கிவார் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் கோசுவாமி. கூலி தொழிலாளியான இவர், தனது கிராமத்தை முக்கிய சாலையுடன் இணைக்க 500 மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து சாலை அமைத்துள்ளார். சுத்தியல் மற்றும் உளியின் உதவியுடன் 9 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையில், தற்போது 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் அமைத்த சாலை பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. எனினும் இன்னும் அகலப்படுத்த வேண்டி உள்ளது. இப்போது, இந்த சாலையில் 4 சக்கர வாகனங்கள் பயணிக்க முடியும். இதனால் 300 பேர் பயனடைவார்கள். இந்த சாலையை அமைக்க அரசோ, கிராம மக்களோ யாரும் உதவவில்லை. மாறாக என்னை ஏளனம் செய்தார்கள்” என்றார்.

கூலி வேலை செய்து வரும் கோஸ்வாமி தினமும் ரூ.600 சம்பாதிக்கிறார். வேலைக்கு செல்லும் முன்பு காலை 5 மணி முதல் 9 மணி வரை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உத்தராகண்டில் இதுபோல சாலை வசதி இல்லாத சுமார் 84 கிராமங்கள் உள்ளன. சில கிராம மக்கள் முக்கிய சாலையை அடைய 10 கி.மீ. வரை நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனிடையே, பாகேஷ்வர் மாவட்டத்தின் கன்டா பகுதி மக்கள் சாலை அமைத்துத் தரும்படி கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து 10 பெண்கள் கூட்டாக சேர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

மெகா வாய்ப்பு...! 10,000-க்கும் மேற்பட்ட காலி பணி...! நாளை நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்...!

Thu Mar 16 , 2023
அரியலூரில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலை […]

You May Like