TikTok: டிக்டாக்கிற்கு தடைவிதித்த அதிபரின் சட்டத்திற்கு எதிராக, அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
உலக அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலி டிக்டாக் (TikTok). இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance) சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. டிக்டாக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, ByteDance நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் பல நாடுகளுக்கு இருந்து வந்தது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக கனடா, நியூசிலாந்து, பிரிட்டன், நார்வே, ஆப்கானிஸ்தான் , பெல்ஜியம், டென்மார்க் ஆகிய நாடுகளில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த செயலி பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வந்தது. முன்னதாக, அமெரிக்காவில் மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீன அரசுக்கு டிக்டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமெரிக்கா முழுவதும் டிக்டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிக்டாக் (TikTok) செயலிக்குத் தடை விதித்து மசோதா நிறைவேறியது.
இந்தநிலையில், டிக்டாக் மற்றும் அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்ட டிக்டாக் தடைக்கு எதிராக அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டம் சாத்தியமான தடை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறி, TikTok மற்றும் அதன் தாய் நிறுவனமான ByteDance நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. புதிய கூட்டாட்சி சட்டம் முதல் திருத்தத்தை மீறுவதாகவும், தண்டனைக்காக நிறுவனத்தை சட்டவிரோதமாக தனிமைப்படுத்துவதாகவும் டிக்டாக் செயலி வாதிட்டது.
மேலும் பயனர்கள் தரவை பாதுகாக்கவும் சீன அரசின் செல்வாக்கை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் டிக்டாக் விளக்கமளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்ட தடை சட்டம், அடுத்த அதிபர் பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 19 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சட்டம் ஆப் ஸ்டோர்கள் டிக்டாக்கை வழங்குவதை தடை செய்கிறது மற்றும் டிக்டாக்கை ஆதரிக்கும் இணைய ஹோஸ்டிங் சேவைகளையும் தடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: Haryana | கவிழ்கிறதா பாஜக ஆட்சி.? ஆதரவை வாபஸ் பெற்ற சுயேட்சை எம்எல்ஏக்கள்.!! பரபரப்பான தகவல்.!!