இந்திய கிரிக்கெட் உலகின் ‘கிங்’ என அழைக்கப்படும் விராட் கோலி, தனது அதிநவீன ஃபிட்னஸால் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஒரு வாரத்தில் 5 நாட்கள், தினமும் 2 முதல் 4 மணி நேரம் வரை அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். கார்டியோ, வெயிட் லிப்டிங், மற்றும் ஹை இன்டென்சிட்டி பயிற்சி என அனைத்தும் அடங்கும். அவரது ஃபிட்னஸ் சீக்ரெட்டில் நீர்ச்சத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், விராட் கோலி ‘பிளாக் வாட்டர்’ குடிப்பதாக வதந்திகள் இருந்தாலும், அவர் உண்மையில் ‘எவியான் நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர்’ (Evian Natural Spring Water) எனும் பிரெஞ்சு நிறுவனத்தின் தண்ணீரையே குடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் எவியான் நேச்சுரல் ஸ்பிரிங் வாட்டர் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
இந்த தண்ணீரின் சிறப்பம்சம் என்ன?
* இந்த எவியான் தண்ணீர் பிரான்ஸின் Evian-les-Bains பகுதியில் உள்ள இயற்கை மலைகளில் இருந்து பெறப்படுகிறது.
* பனிப்பாறை மணல் வடிகட்டும் அமைப்பில் இருந்து சுத்திகரிக்கப்படும் இது, மின்னூட்டச் சத்துக்கள் நிறைந்தது.
* எந்தவிதமான வேதிப்பொருளும் கலப்பில்லாதது, மேலும் உயர் பிஹெச் அளவு கொண்டது என்பதும் முக்கிய அம்சம்.
* சிறந்த உடல்நலத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும் தன்மை கொண்டது.
விலை எவ்வளவு தெரியுமா? ஒரு லிட்டர் Evian தண்ணீரின் விலை ரூ.4,000 வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆன்லைன் தளங்களில், குறிப்பாக Amazon-ல் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.600, 12 பாட்டில்கள் கொண்ட பெட்டி ரூ.4,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விராட் கோஹ்லியின் உணவுமுறை: 2018ல் மூளைச்சுவர் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிறகு, விராட் கோஹ்லி முழுமையாக காய்கறி உணவுக்கே மாறியுள்ளார். அதிக புரதச்சத்து கொண்ட, ஸ்டீம் செய்து சமைக்கப்படும் உணவுகளை தவிர வேறு எதையும் அவர் சாப்பிடுவதில்லை. விராட் உணவில் ஓலிவ் எண்ணெயில் சமைக்கப்படும் பான் கிரில் உணவுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அவரின் சுபர்ஃபிட் உடலுக்குப் பின்னால் உள்ள ரகசியம்: ஒழுங்கான உணவுமுறை, நேரத்தோடு டின்னர் (அனுஷ்கா கூறியபடி 5.30 மணிக்குள் இரவு உணவு முடித்து விடுவார்கள்), மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகும்
Read more: மதுரையில் கால் வைத்த விஜய்.. பூக்களை தூவி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!!