மயிலாடுதுறையில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறை துலாக் கட்ட காவிரியில் ஆண்டு தோறும் நடைபெறும் கடைமுக தீர்த்த வாரி உற்சவத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம். விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநா தர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் உற்சவர்கள் காவிரியின் இருகரை களிலும் எழுந்தருள உள்ளனர்.
இந்த நிலையில் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை தினமாக இருக்கும். விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 19-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.