தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை கட்டாய உறக்கம் அவசியம். இது பாதிக்கப்படும்போது உடலில் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு கட்டிலில் படுத்தால் தான் தூக்கம் வரும் சிலருக்கு தரையில் படுத்தால் தூக்கம் வரும். இதில் எது நல்லது எது கெட்டது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் .
பொதுவாக தரை மற்றும் மெத்தை அல்லது கட்டிலில் படுத்து உறங்குவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இருக்கின்றன. குளிர் மற்றும் மழைக்காலங்களில் தரையில் தூங்கும்போது அதிகமான குளிரினால் ஜலதோஷம் மற்றும் உடல் வலி போன்றவை வர காரணமாக இருக்கும். மேலும் சுகாதாரம் மற்றும் தரையில் உறங்குவதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இது போல் தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகளும் இருக்கின்றன. தீராத கழுத்து வலி உடையவர்கள் தரையில் படுத்து தலையணை இல்லாமல் உறங்கும் போது அவர்களது கழுத்து வலிக்கு சிறந்த தீர்வாக அமையும். மேலும் தரையில் படுத்து உறங்குவதற்கு முறையான விரிப்புகளை பயன்படுத்த வேண்டும் . கடுமையான உடல் வலி உடையவர்களும் தரையில் படுத்து உறங்கும்போது நல்ல உறக்கத்தை பெறலாம்.
சிலருக்கு முதுகு சரியான நிலையில் இல்லாமல் சற்று வளைந்து இருக்கும். அதுபோன்று இருப்பவர்கள் தரையில் படுத்து உறங்குவதால் அவர்களது வளைவுத்தன்மை நேர்த்தியாக வாய்ப்பு இருக்கிறது. எனினும் தரையில் படுத்து உறங்குவதற்கு முறையான குறிப்புகளை பயன்படுத்துவதே நன்மையை தரும். மேலும் தரையில் படுத்து உறங்குவது சுவாசப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.